தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் (2018) வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒட்டப்பட்ட வேட்பாளர் தேர்வு பட்டியலை கிழித்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த தகுதியான அனைவரின் பெயர் பட்டியலையும் ஒட்டியுள்ளார் ஒரு தேர்தல் அதிகாரி. இந்த சம்பவம் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக் கோரி போராடிவரும் அரசியல் கட்சியினருக்கே அதிர்ச்சியளித்துள்ளது. ஆளும் கட்சியினருக்கு ஆத்திரமூட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயக்கடன் சங்கம் இயக்குநர் தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலினை செய்ய தேர்தல் ஆணையர் காலையிலிருந்து வராத காரணத்தால் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதுடன் உள்ளிருப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களின் பட்டிலை வெளிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் பின்வாங்கவில்லை இரவு 8 மணிக்கு வந்த போலிசார் தேர்தல் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முழு வேட்பாளர் பட்டியல் வெளியிட நேரம் கேட்டுவிட்டு போலிஸ் பாதுகாப்புடன் தகுதியான வேட்பாளர் பட்டியலை தயாரித்து 9 மணிக்கு கொண்டுவந்து ஒட்டினார். அதன் பிறகு பட்டியலை சரிபார்த்த ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் தேர்தல் அதிகாரியுடன் சேர்த்து வீடியோ, மற்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகு வெளியே வந்த ஆசிரியர்கள் தான் தமிழக கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே முதல்முறையாக.. ஒட்டிய வேட்பாளர் பட்டியலை கிழித்துவிடு மாற்றுப் பட்டியலை ஒட்டியுளளனர் என்ற ஆசியர்கள், இதனால் தேர்தல் அதிகாரி கூட மாற்றப்படலாம் அல்லது தேர்தலில் முறைகேடு என தேர்தலை ரத்தும் செய்வார்கள் என்றனர்.