Skip to main content

ஹைட்ரோ கார்பன், சாஹர்மாலா திட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் - மீனவர் முன்னணி அறிவிப்பு

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Nagapattinam fishermen


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் முன்னணி என்கிற புதிய அமைப்பை நாகையில் மீனவர்கள் துவங்கியுள்ளனர். அந்த அமைப்பின் மூலம் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 
 

வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழக கடற்கரை பகுதிகளில் மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு மீனவர் அமைப்புகளில் ஆலோசனை கூட்டம் நாகையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. 
 

கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், சாஹர் மாலா, கடற்கரை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைத்து மீனவர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு இயக்கமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் முன்னணி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. 
 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடற்கரை பகுதிகளில் செயல்படுத்தினால் கடல்வளம் முற்றிலும் அழிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 
 

 வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி உலக மீனவர் தினத்தன்று ராமேஸ்வரத்தில் நடைபெறும் மாநாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்