Skip to main content

தொடர் மழை; பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறக்க நடவடிக்கை

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

 continuous rain; Action to release surplus water in Bundi reservoir

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்கும் படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தொடர் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்