Published on 23/01/2024 | Edited on 23/01/2024
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நாளை (24.01.2024) மற்றும் நாளை மறுநாள் (25.01.2023) என இருநாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்னையில் இருந்து 580 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.