Published on 18/07/2019 | Edited on 18/07/2019
பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து பிரான்ஸ் நாட்டிற்கு ஒரு கும்பல் சட்ட விரோதமாக அனுப்பி வருவதாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது. இதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தானாக வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவரது தலைமையிலான கும்பல் போலி பாஸ்போர்ட் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் ஸ்டெல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உழவர்கரை குமார், பச்சையப்பன் ஆகிய 3 பேரையும் 17.07.2019 புதன்கிழமை மாலை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.