கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெலாந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி 2021–2022 கல்வியாண்டு பொதுத்தேர்வில் பன்னீரண்டாம் வகுப்பில் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் முருகன்குடி செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொறுப்பாளர்களும், திருவள்ளுவர் தமிழர் மன்ற பொறுப்பாளர்களும் இணைந்து பாராட்டு தெரிவித்து ஆசிரியர்களுக்கு துண்டு அணிவித்து சிறப்பு செய்தனர். மேலும் நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் முருகன்குடி முருகன், எல்.ஐ.சி வெங்கடேசன், ஆசிரியர்கள் இளவரசு, சக்கரவர்த்தி, கார்த்திகேயன், ஞானபிரகாசம், மற்றும் பிரகாசு, மணிமாறன், வேல்முருகன், சசிகுமார், மணிவேல், பாக்யராஜ், அன்பரசன், மணியரசன், தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இப்பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை, அடிப்படை வசதி குறைவாக இருக்கிறது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்காக சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும். கண்காணிப்புக் கேம்ரா (சிசிடிவி) பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.