Skip to main content

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விஞ்ஞான் பலகலைக்கழகத்தின் 7- வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது விஞ்ஞான் பல்கலைக்கழகம். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் முன்னாள் திட்ட இயக்குநர் டாக்டர் ஹரி நாராயணா கலந்து கொண்டு, பல்கலைக்கழக மாணவிகள் 1569 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

 

 

Composer Ilyaraja awarded honorary doctorate degree ANDHRA PRADESH VIGNAN UNIVERSITY

 

 

 

இதில் 22 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், 18 மாணவர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.  இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா , அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே, குளோபல் ஹெட் டெக்னாலஜி பிஸ்னஸ் அமைப்பின் மூத்த துணைத் தலைவர் ராஜண்ணா ஆகிய மூவருக்கும் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

 

 

சார்ந்த செய்திகள்