வேலூர்மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் குடியாத்தம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு குடியாத்தம் நகராட்சியின் ஆணையாளராக பணியாற்றிய செல்வ பாலாஜி, ரோஜா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் இருவரையும் சில முறை தனிமையில் இருக்க வைத்துள்ளது. அதனை தொடர்ந்து ரோஜா, செல்வபாலாஜிக்கு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்மென நெருக்கடி தந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, கடந்த 3-5-2019 ஆம் ஆண்டு அன்று ரோஜாவை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகிய இருவரும் பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை அரசு துறை ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றம் செல்வபாலாஜியின் தாயார் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் இடையே சமாதானம் பேசி பிரிக்க முயன்றனர். இருவரும் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் ரோஜாவின் பின்னால் இருந்த குடியாத்தம் நகர அதிமுகவின் முக்கிய பிரமுகர் அரசியல் செய்ய தொடங்கினார்.
இதனால் விவகாரம் பெரியதானது. அதனை தொடர்ந்து காதல் தம்பதிகள் இருவருக்கும் இடையே மோதல் வந்தது. கமிஷனர் செல்வ பாலாஜியை பன்ருட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து பின்பு சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ரோஜா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை தந்துள்ளார். அதில், கமிஷனர் செல்வ பாலாஜி குடியாத்தத்தில் பணியாற்றியபோது, தனது பங்களாவிற்கு அழைத்து பணி நிரந்தரம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார், திருமணம் செய்தவர், பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார். தன்னை ஆசைவார்த்தை கூறி கற்பழித்து தாலி கட்டி ஏமாற்றிய ராணிப்பேட்டை நகராட்சியின் ஆணையராக உள்ள செல்வபாலாஜி, இதுப்போன்று பல பெண்களுக்கு ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவருகிறார் உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.