தமிழக பாஜக தலைவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். 4 மாதம் லண்டனில் தங்கிப் படித்து முடித்துவிட்டு டிசம்பர் மாத இறுதியில் இந்தியா திரும்பவுள்ளார்.
இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழக பாஜக தலைவர் வரும் வரை கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா தலைமையிலான இந்த குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவிற்குக் கட்சியில் தற்காலிக நடவடிக்கைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக ரீதியாக எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றால் பாஜகவின் தேசிய தலைமை மற்றும் தமிழக பாஜக தலைவரின் ஒப்புதல் தேவை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜகவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து பாஜக தலைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.