Skip to main content

பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இடைவெளி இல்லை- ராதாகிருஷ்ணன் பேட்டி

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

திருச்சி மணப்பாறை அடுத்து நடுக்காட்டுபட்டியில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

 

hh

 

மீட்பு பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் கார்பைடு இயந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது. பாறையை துளைத்து எடுத்தால் அருகிலுள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜெர்மன் மெஷின் தற்பொழுது துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்து குறித்தும் சுஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உரிய முறையில் சரியான முறையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணி பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன் சுஜித் நிலைபற்றி  பெற்றோருக்கு தகவல், ஆலோசனை வழங்கப்படுகிறது. குழந்தையின் நிலை குறித்து வெளிப்படையாக பேசுவது பெற்றோருக்கு தேவையற்ற கவலையை ஏற்படுத்திவிடும். 38 முதல் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முயற்சியும் கைவிடப்படாது. ஆழ்துளை கிணற்றில் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த போதிய இடைவெளி இல்லை. இந்த மீட்டு பணிக்கான முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்.

அதேபோல் தற்போது புதிதாக குழி தோண்டப்படும் போது ஏற்படும் அதிர்வு காரணமாக குழந்தையின் மீதும் மண் விழுந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்