Published on 18/01/2019 | Edited on 18/01/2019

புதுவையில் ஏழாவது ஊதியக்குழு அமுல்படுத்தக்கோரி கல்லூரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
புதுச்சேரி அரசு சார்பு மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட18 கல்லூரிகளில் பணியாற்றும் 4000 கல்வி நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 வது ஊதிய குழுவை அமுல்படுத்துதல், 6-ஆவது ஊதியக்குழுவின் நிலுவை சம்பளத்தை வழங்க கோருதல், 10 வருடத்துக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 19 அரசு சொசைட்டி கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்களும் ஆசிரியரல்லாத ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.