கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சில பகுதிகளில் குறிப்பாக, வட மாநிலங்களான டெல்லி, உ.பி., பீகார் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக, டெல்லியில் வரலாறு காணாத வகையில் காற்று மாசு ஏற்பட்டது. அதிலும், தீபாவளி சமயத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான காற்று மாசு இருந்தது. இதற்கிடையே, காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையே மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு மிதிவண்டியில் அலுவலகத்துக்கு வந்த சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் வகையில் மிதிவண்டியில் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.