கோவை துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பொன்னூத்து அம்மன் கோவிலுக்கு சனிக்கிழமை அன்று பக்தர்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை பூசாரி மற்றும் பக்தர்கள் வரும்போது மலைப்பகுதியில் தூர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக அவர்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூர்நாற்றம் வீசப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்த நிலையில் கிடந்தார். பின்னர் இறந்த பெண் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் மலைப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாலும், மாலை நேரங்களில் மது அருந்த பல பேர் இங்கு வருவதாலும் இந்த பெண் ஒருவேலை யானை தாக்கி இறந்து இருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.