சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் கோவை அருகே உள்ள மத்தவராயபுரம் கிராமத்தில் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள மத்வராய புரம் ஊராட்சி சார்பில் அவ்வூர் மக்களுக்கு அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. எல்லோரும் தங்களின் வீடுகள் முன்பு வேப்பிலை வையுங்கள். மேலும் வீடுகள் முன்பு மாட்டு சாணம் தெளியுங்கள். அப்போதுதான் கரோனா வைரஸை தடுத்த முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்வராயபுரம் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சாணத்தை தெளித்து, வேப்பிலையை வீட்டு வாசலில் செருகி வைத்துள்ளனர்.