கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழ் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை சென்றுள்ளார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று (22.11.2021) நடைபெற்ற அரசு விழாவில் 89 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 587 கோடி ரூபாய் மதிப்புள்ள முடிவுற்ற 70 திட்டங்களையும் அவர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து 25,123 பயனாளிகளுக்கு 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைதொடர்ந்து, இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் 10 புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத் தலைவர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளோர் கலந்துகொண்டனர்.