Skip to main content

முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக
பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!


தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் யாரையும் பார்க்க முடியவில்லை. எல்லோரும் ஆர்.கே.நகர் பரப்புரைக்கு சென்னை பறந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது, தினகரன் அணியில் இருக்கும் கர்ணன் என்பவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வசைபாடிய ஒரு வீடியோவை முகநூலில் பதிவேற்றினார்.

இவர் கடமலை – மயிலை பகுதியில் தினகரனால் நியமிக்கப்பட்ட இலக்கிய அணிச் செயலாளர். சமூக வலைதளங்களில் வேகம் காட்டிவரும் பன்னீர் செல்வம் அணியின் ஐடி விங், கர்ணன் பதிவேற்றிய வீடியோவைப் பார்த்து அதிர்ந்தது. உடனே, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேனி மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் கர்ணனை தேடிவந்தனர்.

இதைஅறிந்த கர்ணன் ஆர்.கே.நகர் பரப்புரையில் மறைந்துகொண்டார். நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு வந்த கர்ணனை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தது காவல்துறை. அவதூறு பரப்பியது, நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது, சமூக வலைதளத்தை தவறான நோக்கத்தோடு பயன்படுத்தியது போன்ற பிரிவுகள் கீழ் கர்ணன்மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் தேனி மாவட்ட தினகரன் அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தமிழ்ச்செல்வனும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாததால் அதிருப்தியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

- சக்தி

சார்ந்த செய்திகள்