தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை டாஸ்மாக்கில் மதுவிற்பனை களைகட்டியது.
கடந்த 9 ஆம் தேதி மட்டும் தமிழகத்தில் 217.96 கோடி ரூபாய் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னை மண்டலத்தில் 50.04 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலம்- 42.59 கோடி ரூபாய், சேலம் மண்டலம்- 40.85 கோடி ரூபாய், கோவை- 41.28 கோடி ரூபாய் என மது விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமாகவின் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் 100 சதவிகிதம் வெற்றியடைய வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூட வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியானோர் மதுக்கடைகளில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.