Skip to main content

அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற நகர சபைக் கூட்டம்

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

 City council meeting attended by Minister KN Nehru

 

கிராம சபைக் கூட்டங்கள் போல இனி நகர சபை, மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும், வரும் நவம்பர் 1ம் தேதி (இன்று) முதல் இந்த கூட்டங்களை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கான ஆய்விற்காக ஒவ்வொரு வார்டிலும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலைவராக கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெறுகிறது.

 

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மலில் 6வது வார்டு மாநகர சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிகிறார் என்று கூறப்பட்டது. நேற்று அந்த திட்டம் மாற்றப்பட்டு அந்த பகுதியில் நடக்கும் நகர சபைக் கூட்டத்தில் நகராட்சித் துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

 

கிராம சபைக் கூட்டங்களைப் பொறுத்தவரையில் மக்களின் குறைகளும் அங்கு நடைபெற்று முடிந்த பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களும் கேட்கப்படும். அதற்கான அரசின் கவனமும் பெறப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும். 

 

அதேபோல் இனி நகர்ப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளையும் நகர சபைக் கூட்டங்கள் மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் மூலமாகக் கேட்டறிந்து அதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்