Published on 08/07/2021 | Edited on 08/07/2021

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
"மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் கூறியது கண்டனத்திற்குரியது. மேகதாது அணை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.