Published on 08/06/2021 | Edited on 08/06/2021
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகிறது. அதற்கேற்றார் போல தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வந்துள்ளார். முக்கியமாக கோவையில் கரோனா பாதித்தவர்களின் அறைக்கே சென்று அவர்களிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 12ம் தேதி கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் திருவாரூர் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.