8 வயதில் 25 உலக சாதனைகளைப் படைத்த சிறுவன் இமானுவேல் டாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் இமானுவேல் டாரி, இளம் வயதிலேயே டாக்டர் பட்டம் பெற்றிருப்பதோடு, சில நிமிடங்களில் அதிகமான கூட்டல், கழித்தல் கணக்குகளை செய்தல், 10 கி.மீ. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி, ஒரு நிமிடத்தில் 109 ஆத்திச்சூடி சொல்வது என்பன போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
இவைத் தவிர, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய எழுத்துகளை தலைகீழாக சொல்வது போன்ற சாதனைகளையும் இமானுவேல் படைத்திருக்கிறார்.
அந்த சிறுவனை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து, தனது சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தில் கையொப்பமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சரைச் சந்தித்தது மிகுந்த ஊக்கம் அளித்திருப்பதாகவும், அது மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருப்பதாகவும், இமானுவேல் டாரி தெரிவித்துள்ளார்.