Skip to main content

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Chief Minister MK Stalin's order to provide Rs 25 lakh to the family of the deceased policeman!

 

மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (22/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "இன்று அதிகாலை, மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு பாதுகாப்புக்குச் சென்றபோது, கீழவெளி வீதியில் உள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சு மருந்து கடையின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். 

 

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், அதோடு மட்டுமல்லாமல் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மற்றொரு தலைமைக் காவலரான கண்ணனுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க ஆணையிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்