Published on 17/04/2022 | Edited on 17/04/2022

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266- வது பிறந்தநாள் இன்று (17/04/2022) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி, முத்துசாமி, சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், த.வேலு, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.