Published on 10/05/2021 | Edited on 10/05/2021
தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, கரோனா நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வரும் மே 15ஆம் தேதி முதல் கரோனா நிதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.