தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழக அரசு தொடர்ச்சியாக கரோனா தடுப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்கள் உடனான ஆலோசனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவை தடுப்பதற்காக முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவர்.எழிலன் (திமுக), மருத்துவர். சி.விஜயபாஸ்கர்(அதிமுக), முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக) சதன் திருமலைக்குமார் (மதிமுக) எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் உட்பட 13 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.