திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலைஞர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோபாலபுரம் வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க வருவதாக தகவல் வருகிறது. முதல்வர் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.