Skip to main content

கறுப்புக்கொடி ஏந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

chidambaram raja muthaiha medical college students

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை 58 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 4ஆம் தேதி  தமிழக முதல்வர் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த ஆண்டு முதல் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டார்.

 

ஆனால், அரசாணைப்படி பல்கலைக்கழக நிர்வாகம் கல்விக் கட்டணத்தை வசூலிக்காமல் மாணவர்களிடம் தனியார் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் பல்வேறு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், 80-வது நாளான இன்று மாணவர்கள் அனைவரும் கையில் கறுப்புக்கொடி ஏந்தி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணைப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், கல்விக் கட்டணத்தை அரசாணைப்படி வசூலிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்