Skip to main content

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 1981ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையினா் கடந்த 2014ம் ஆண்டு வரை தொடா்ந்து 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை கோயிலில் நடத்தி வந்தனர்.

 

Chidambaram - Natyanjali Festival -



இந்த நிலையில் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் பொது தீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வருகின்றனர்.
 

இந்த நிலையில் இந்தாண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் பிப். 19ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.


 

இதுகுறித்து அறக்கட்டளை செயலாளர் சம்பந்தம் கூறுகையில், 19ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 6 நாட்டிய நாடகங்கள், மோகினி ஆட்டம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூா், ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கின்றனர்.
 

வருகிற 2021ஆம் ஆண்டு 40-ஆவது நாட்டியாஞ்சலி விழா விமரிசையாக 8 நாள்கள் நடைபெற உள்ளது. எதிர்காலத்தில் மாதந்தோறும் நாட்டியாஞ்சலி, இசை விழாக்கள் நடத்தப்பட உள்ளன என்றார். இவருடன் அறக்கட்டளை பொருளாளா் நடராஜன், அணிவணிகா் பழநி, டாக்டர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

 

சார்ந்த செய்திகள்