Skip to main content

சிதம்பரம் நகராட்சி பள்ளிக்கு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது!

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

Chidambaram Municipal School Award for Best School in the District!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் உள்ள மனா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வித்துறை, கடலூர் மாவட்ட அளவில் 2019- 2020 ஆம் ஆண்டுக்காண சிறந்த பள்ளி விருதை  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், அவரது அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த நிலையில் சிறந்த பள்ளிக்கான விருது வாங்குவதற்காக உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா பள்ளியின் வளாகத்தில் இன்று (12/03/2022) நடைபெற்றது. இதில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலர் சௌந்தரராஜன் கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கினார்.  குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமார், மோகன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்தும் ஆசிரியர், ஆசிரியைகளின் செயல்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார்கள்.

 

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர், சிறந்த பள்ளி விருது வாங்குவதற்காகப் பணியாற்றிய ஆசிரியர், ஆசிரியைகள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியர், இலக்கிய, பள்ளி மேலாண்மை குழு தலைவி மாரியம்மாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்துச் சான்றிதழ் வழங்கினார்.  

 

இந்த விழாவில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சத்துணவு பணியாளர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்