Published on 24/12/2019 | Edited on 24/12/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் காரணமாக சிதம்பரம் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.