44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 'செஸ் ஒலிம்பியாட் 2022' நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்றுநோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிக்கான இலச்சினையை (லோகோ) வெளியிட்டுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை மீது லேசர் ஒளி கீற்று மூலம் இந்த இலச்சியனையானது அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிக்கான கவுண்ட் டவுன்-ஐ முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த இலச்சினையை தமிழ்நாடு அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் சேர்ந்து வடிவமைத்துள்ளது.