Skip to main content

சென்னை டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18.08.2020 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் இடைவெளியுடன் நின்று மதுபானம் வாங்க தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

 

மால்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை  மட்டுமே திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்