மருத்துவ படிப்பில் இடம் வழங்க கோரி பார்வைத்திறன் குறைந்த மாணவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சேலத்தை சேர்ந்த விக்னேஷ் பாலாஜி என்ற பார்வை திறன் குறைந்த மாணவர், மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பித்தார். அவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், 40 சதவீதத்திற்கு மேல் பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவ படிப்பு படிக்க தகுதியில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதில் மனுதராருக்கு 75 சதவீதம் பார்வை திறன் குறைபாடுகள் உள்ளதால் அவருக்கு மருத்து படிப்பில் இடம் வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.