பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுனர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
அதனை தொடர்ந்து பேசிய விஜய், எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு பேசினார். காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கி விட்டார் எம்.ஜி.ஆர். அரசியலில் புகுந்து விளையாடுங்க, ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க. என் பேனரை கிழியுங்கள், ஆனால் ரசிகன் மீது கை வைக்காதீர்கள். சமூக வலைத்தளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள்" என்றார்.