Skip to main content

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! உடனடியாக நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

Chennai psbb school teacher issue.. Jothimani MP tweet


கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனாவின் பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

 

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் அளித்துள்ளனர். ஆசிரியரின் இந்த செயலுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வலியுறுத்தியுள்ளார். 

 

 

எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் முறைகேடாக நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்த புகார்களைப் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளது. குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்