வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில், செம்பியம், திருவிக நகர் பகுதியில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் A.N.S.பிரசாத் இல்லத்தில் மோடி கிச்சன் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் இன்று வரை தினமும் ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாலையோரம் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற மக்கள் என அன்றாடம் பசியில் தவிக்கும் மக்களை தேடிச்சென்று, இரண்டு பேர் கொண்ட சிறு, சிறு குழுக்களாக அரசாங்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உணவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த மோடி கிச்சன் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களாலும், தூய்மை பணியாளர்களாலும், காவல்துறையினராலும், மாநகராட்சி துறையினராலும் பாராட்டக்கூடிய வகையில் அரசாங்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைக்கு இந்த மோடி கிச்சனுக்கு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வந்திருந்து இந்த மோடி கிச்சன் செயல்படும் முறை குறித்து ஆய்வு செய்து, மேலும் சிறப்பான முறையில் செயல்படக்கூடிய வகையில் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று மோடி கிச்சன் குழுவினரின் பொறுப்பாளரான, மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் அவர்களை கேட்டுக்கொண்டார். மேலும், தன்னலம் கருதாமல் இந்த கொடிய வைரஸ் தாக்குதல் நேரத்தில் துணிந்து சேவை செய்யும் இக்குழுவினரை பாராட்டினார்.
இப்போது மோடி கிச்சன் சார்பாக இதுவரை 22 ஆயிரம் பேருக்கு உணவும், ஏறத்தாழ 12,000 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகை மளிகை பொருட்களை மாநில தலைவர் வழங்கினார்.