சென்னையில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ரயில் இயக்கப்படும் நேரம் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று (03/09/2020) வெளியிட்டு இருந்தது. மேலும் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மெட்ரோ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 'பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படும். மெட்ரோ ரயில் உள்ளே 25 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் குளிர்சாதன வசதி பராமரிக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையங்களில் 24 டிகிரி முதல் 30 டிகிரி வரையிலான செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதன வசதி பராமரிக்கப்படும். பயணிகளுக்காக காற்று சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்று சென்னை ரயில் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.