Skip to main content

பயணிகளுடன் தீபாவளியை கொண்டாடும் மெட்ரோ ரயில் நிர்வாகம்! 

Published on 31/10/2018 | Edited on 31/10/2018




 

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் உட்புறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்களில் அலங்கா​ர​ தோரணங்களும் வாழ்த்து ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகளுடன் தீபாவளியை கொண்டாடும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை செய்துள்ளது.
 

மேலும் தீபாவளிக்காக மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி மற்றும் 3ஆம் தேதி அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பார்கள் என்பதால், வழக்கமாக இரவு 10 மணி வரை செயல்படும் மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்