கரோனா பரவாமல் தடுப்பதற்காக இரு சக்கர வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது சென்னை மாநகராட்சி. அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் காலை 07.30 மணி முதல் இனி இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. காய்கறி, மலர்கள் வாங்க பைக்கில் வரும் வியாபாரிகள் காலை 04.00 மணி முதல் 07.30 மணிக்குள் வர வேண்டும். தடையை மீறி மார்க்கெட் வளாகப் பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் நாளை (19/04/2020) முதல் பறிமுதல் செய்யப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களைக் கொண்டு வந்து காய்கறிகளை வாங்க நேரக்கட்டுப்பாடு இல்லை என்று மாநகராட்சித் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகக் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்ததால் கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், இத்தகைய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.