Skip to main content

மழைநீர் வடிகாலை மூடாததால் தாய்- மகள் பலியான விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

chennai high court order nhai


நொளம்பூர் நெடுஞ்சாலை ஓரம் மழைநீர் வடிகாலை மூடாததால், தாய்- மகள் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் தொடர்பான புகார் மனு மீது முடிவெடுக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரிப் பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர். இந்தச் சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புதிதாகப் புகார் மனு அளிக்க, மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

 

அந்தப் புகார் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்