சென்னை உயர்நீதிமன்றம், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதை காண முடிகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்னவானது என கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜீன் 9 ந்தேதி முதல் 15ந்தேதி வரை வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் தலைகவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக வழக்குகள் பதியப்பட்டன. அதன்படி 6999 வழக்குகள் 7 நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
4701 வழக்குகள் தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீதும், பின்னால் அமர்ந்தவர்கள் தலை கவசம் அணியாதது என 80 வழக்குகள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 430 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 10 வழக்குகள், 1628 வழக்குகள் லைசென்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் வழக்குகள் என கணக்கு வருகிறது. வழக்கு போடுவது மட்டுமின்றி பிரிவுக்கு ஏற்றாற்போல் அபராதம் வசூலித்தது ஒரு வகையென்றால், அபராதத்தை குறைத்து போடுகிறோம் என தனியாக வசூலித்தது மற்றொரு வகை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.