வாசிப்பை வாழ்க்கையாக்குவோம் என்ற நோக்கத்தோடு சென்னை YMCA நந்தனம் திடலில், 42-வது புத்தக கண்காட்சி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்த கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு, 12 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன.
மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்த வகையில் ஏழாவது நாளான இன்று நூல் ஆயுதம் என்ற தலைப்பில் தி.மு. அப்துல் காதர், வெற்றிப்படிகள் என்ற தலைப்பில் கே.வி.எஸ்.ஹபீப் மஹம்மது, அகர முதலி எழுத்தெல்லாம் என்ற தலைப்பில் தங்க காமராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இறுதியில் கே.ஜலாலுதீன் ,செயற்குழு உறுப்பினர், பபாசி நன்றியுரை ஆற்றுகிறார்.