சென்னையில் 5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிக்னல் அருகே 5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.