
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் அப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்த நிலையில், அப்பெண் வெளியூரில் வேலை பார்த்ததால் அங்கு இருவரும் வீடு பார்த்துத் தங்கியுள்ளனர்.
அப்பெண் கருவுற்றது தெரிந்த பின் சூர்யா "தற்போது குழந்தை வேண்டாம்" என மனைவியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். அதன் பின் அப்பெண்ணை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சூர்யா சென்றுவிட்டார். கடந்த 2 மாதங்களாக அப்பெண் சூர்யாவிடம் கேட்டும் சூர்யா அப்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து செல்லாததால் அப்பெண் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து அவர் மீது ஏமாற்றுதல், கட்டாய கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.