திருச்சியில் தொடர்ச்சியான செயின் பறிப்பு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் செயின் பறிப்பு கொள்ளை எப்படி நடக்கிறது. இதை யார் நடத்துவது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனர் போலீசார் . ஆகவே நகரின் பல பகுதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி காவல்துறை அதிகாரிகளும் சிசிடிவி கேமிரா மக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் பொருத்தும் பணிகளை முடுக்கிவிட்டனர்.
அதே நேரத்தில் செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கடந்த 20 ம் தேதி காலை ஸ்ரீரங்கம் மேலூர் போலிஸ் சோதனையில் இருந்த போது பஜாஜ் பல்சரில் வந்த ஒருவர் போலிசை பார்த்ததும் தப்பிக்க வண்டியை திருப்பிய நிலையில் அவனை உடனை சுற்றி வலைத்து பிடித்த போலிஸ் விசாரிக்கையில் அவன் பிராங்கிளின் குமார் என்றும் ராகவேந்திரபுரத்தை சேரந்தவன் என்றும் தெரிய வந்தது. மேலும் நடந்த விசாரணையில் கடந்த வாரம் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் 1000 ரூபாய் மிரட்டி வாங்கினேன் என்பதை ஒப்புக்கொண்டு மீதம் 600 ரூபாய் கொடுத்தான். இதன் பிறகு அவனை போலிஸ் மேலும் நடத்திய விசாரணையில் இது வரை 15 பெண்களிடம் இருந்து செயின்களை பறித்தேன் என்று சொன்னவுடன் அதிர்ச்சியடைந்தனர்.
எப்போதும் ஒரு குழுவாக இருந்துதான் பெண்களிடம் செயின் பறிப்பார்கள். அதனால் போலிசுக்கு எப்படியும் தகவல்கள் வெளியே வந்துவிடும். கடந்த மாதங்களில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவம் திருடன் யாரென்றே தெரியாமல் குழம்பி கொண்ட இருந்த நிலையில்தான் பிராங்க்ளின் தனியே சென்று இந்த சம்பவத்தை நடத்துவது தெரிய வந்தது.
பிராங்கிளின் குமார் போலிசிடம் கொடுத்த வாக்குமூலம் ..
ஏப்ரல் மாதத்தில் கே.கே.நகரில் முருகவேல் நகரில் வீட்டில் படுத்திருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 6 சவரன் நகையை பறித்து சென்றேன்.
அதை போல் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் கான்வென்ட் ரோட்டில் மாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடமிருந்து சுமார் 2 ¾ பவுன் தாலி செயினை பறித்தேன்.
அதே போல் யூனியன் கிளப் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடமிருந்து 3 பவுன் செயின், வடக்கு ஆண்டார் வீதியில் சாரா லேடீஸ் ஹாஸ்டல் முன்பு ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது 2½ பவுன் செயின், ஸ்ரீரங்கத்தில் திட்டி ஆஞ்சநேயர் கோயில் எதிரில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் செயின், ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரில் ஒரு பெண் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சுமார் 5 பவுன் செயின், சீனிவாசா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 2 பவுன் செயின்,
திருச்சி பாலக்கரை இருதயபுரம் மேலத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் தங்கதாலி செயின், திருச்சி இருதயபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்கத் தாலி செயின், ஸ்ரீரங்கம் கொண்டார் தோப்பில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் சுமார் 5¾ பவுன் செயினை பறித்து செயின், ஸ்ரீரங்கம் மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 3 பவுன் செயினை பறித்து செயின், ஸ்ரீரங்கம் வாருதி நகரில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 5 பவுன் செயின், கண்டோன்மெண்ட் ஹெட் போஸ்ட் ஆபீஸ் எதிரே இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 6 பவுன் செயின், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சுமார் 2 பவுன் தாலிச் செயின்னை பறித்து சென்றேன் என கூறினான்.
இந்த வாக்குமூலம் பெறப்பட்டபின் அவனிடம் இருந்து ரூ.1800000- மதிப்புள்ள 60 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.600 மற்றும் அவன் ஓட்டி வந்த ரூ. 40000- மதிப்புள்ள பஜாஜ் பல்சர் டூவிலரை கைப்பற்றி கைது செய்து அவனை சிறையில் அடைத்தனர்.