புழல் மத்திய சிறை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ஆக்ஸிஸ் பேங்க் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற சிறைபணியாளர்கள் சங்க தலைவர் சந்தானம் தொடர் முயற்சியில் முகாம் ஏற்பாடு ஆனது.
கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறைத்தலைவர் தலைமையில் கனகராஜ், தலைமையிடத்து சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன் சென்னை சிறைத்துறை துணைத்தலைவர் ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் பிள்ளைகளுக்கு சிறைத்துறை தலைவர் அபாஷ்குமார் ஐ.பி.எஸ். நியமன ஆணைகளை வழங்கினார்கள். வங்கி பணியாளர்களை கௌரவப்படுத்திய சிறைத்துறை துணைத்தலைவர், சென்னை சரகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், செந்தாமரைக்கண்ணன் , சிறை அலுவலர் உதயக்குமார், தர்மராஜ், மற்றும் புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள், உதவி சிறை அலுவலர்கள், என பலரும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று ஆச்சரியப்படுத்தினார்கள்.
தலைமைக்காவர்கள் கண்ணன், ஜான்சன், முதல் நிலைக்காவலர்கள் அனைவரும் பணியாளர் களையும் அவர்களது பிள்ளைகளையும் வரவேற்று உபசரித்தனர்.
தமிழகம் முழுவதும் சிறைத்துறை பணியாளர்கள் பயன் பெறும் வகையில் இது போன்ற முகாம்களை நடத்திட என்று ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.