மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்
காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாடு அரசின் துரோகம்- 'நீட்' மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று(26.8.2017) மாலை 4 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.