நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. அதேபோல் கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெ.வின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை மீண்டும் போலீசார் கையிலெடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை வழக்கு சிபிசிஐடிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் மாற்றப்பட்டது.
இதனால் விசாரணை தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் தற்போது கோடநாடு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 2017ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட் காவலர் ஓம் பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.