Skip to main content

காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

cauvery water mettur dam in salem district

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1.17 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மழைத் தொடர்வதால், இரண்டு அணைகளுக்கும் வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 85,117 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. கபினி அணையில் இருந்து சுமார் 32,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

இதன்மூலம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1,17,117 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1.13 லட்சம் கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 25,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

 

அதேவேளையில், அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. இதனிடையே, அணையில் இருந்து கூடுதல் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால், 16 கண் உபரிநீர் போக்கி மதகுகள் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மின்மோட்டார்கள் மற்றும் மின்தூக்கி உள்ளிட்டவைக் குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்