காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சியினர் சாலைமறியல், ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மருந்துகடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 300க்கும் மேற்பட்ட இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த 1000க்கும் மேற்பட்ட ஜாப் ஓர்க் தீப்பெட்டி ஆலைகள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் 2 லட்சம் தொழிலாளர்கள் இன்று பணிக்கு வரமாட்டார்கள் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஜீ.எஸ்.டி. வரிக்கு எதிராக போராடியது போதும், பல்வேறு தருணங்களில் எங்களுக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். ஆகையில் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
Published on 03/04/2018 | Edited on 03/04/2018